மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகளுடன் பயணித்த எம்ஐ-8 என்ற ரஷ்ய ஹெலிகொப்டர் Vachkazhets எரிமலைக்கு அருகே ஒரு தளத்தில் இருந்து பயணித்த போதே காணமால் போயுள்ளது.
வித்யாஸ்-ஏரோ நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த ஹெலிகாப்டர், கம்சட்கா தீபகற்பத்தின் தெற்கில் உள்ள ஒரு ஏரிக்கு அருகில் திடீரென தரையிறங்கியதாக உள்ளூர் அவசர சேவை தெரிவித்துள்ளது.
ஹெலிகொப்டர் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும், ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்ததாகவும் மாநில செய்தி நிறுவனம் RIA தெரிவித்துள்ளது.
கம்சட்கா தீபகற்பம் சுற்றுலா பயணிகளிடையே பிரபலமான இடமாக திகழ்கின்றது. இது ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிற்கு கிழக்கே 6,000 கிமீ (3,728 மைல்கள்) மற்றும் அலாஸ்காவிற்கு மேற்கே சுமார் 2,000 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.
1960 களில் வடிவமைக்கப்பட்ட இரண்டு எஞ்சின்களை கொண்ட இந்த ஹெலிகொப்டர் ரஷ்யாவிலும் அதன் அயல் நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த 12 ஆம் திகதி 16 பேருடன் பயணித்த எம்ஐ-8 ஹெலிகொப்டர் கம்சட்கா தீபகற்பத்தில் அதிகாலையில் விபத்துக்குள்ளானது.