மேற்கு ஜேர்மனியில் திருவிழாவொன்றிற்கு சென்றுகொண்டிருந்த பேருந்தில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கத்திக்குத்து தாக்குதலிற்கு இலக்கானவர்களிற்கு உயிராபத்து இல்லை இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் மத நோக்கங்கள் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் 16 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள்,இவர்களில் மூவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலோனுக்கு கிழக்கே உள்ள சீகனில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கடந்த வாரம் ஜேர்மனியில் சிரியாவை சேர்ந்த நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் மூவர் கொல்லப்பட்டனர்.