கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்களை வைத்திருந்த நபரொருவரே இவ்வாறு நேற்று வெள்ளிக்கிழமை (30) கைது செய்யப்பட்டார்.
இதன்போது, 72 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 1865 கிலோ கிராம் சட்டவிரோதமாக பிடிபட்ட மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் 39 வயதுடைய நிலாவெளி பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மீன்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.