தெற்கு அதிவேக வீதியில் விபத்து ; ஒருவர் படுகாயம்

57 0

தெற்கு அதிவேக வீதியில் 118 கிலோமீட்டர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை (31) காலை இடம்பெற்றுள்ளது.

லொறி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் காரானது வேகமாக சறுக்கிச் சென்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது காரில் பயணித்த நபரொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.