குருணாகல், அலவ்வ – நாரம்மல வீதியில் நேற்று (29) இரவு இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாரம்மலவிலிருந்து அலவ்வ நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்த வயோதிபப் பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது படுகாயமடைந்த வயோதிபப் பெண் அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல், அலவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.