தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (30) பிற்பகல் கொழும்பில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திசாநாயக்க சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்ற அரசியல் தொடர்புகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் சார்ந்த அரசியல் நிலைமைகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத்தும் இத்தருணத்தில் பங்கேற்றார்.