ரயிலுடன் வேன் மோதி விபத்து ; சாரதி படுகாயம்

62 0

அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கும் யத்தல்கொட ரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள ரயில் மார்க்கத்தில் வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரயில் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான வேனின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில் சாரதி படுகாயமடைந்து வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.