18 முதல் 29 வயதுக்குட்பட்ட இலங்கையர்களில் 54 வீதமானவர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்காவிற்கு ஆதரவளிப்பது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த் பொலிசி மேற்கொண்ட கருத்துகணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது.
ஜூன், ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகளில் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் அனுரகுமார திசநாயக்கவிற்கு54 வீதமானவர்களும்,சஜித் பிரேமதாசவிற்கு 35 வீதமானவர்களும், ரணில் விக்கிரமசிங்கவிற்கு 9 வீதமானவர்களும் ஆதரவு வெளியிட்டுள்ளனர்.
கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 30 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்களில் 38 வீதமானவர்கள் சஜித் பிரேமதாசவிற்கும்,37 வீதமானவர்கள் அனுரகுமாரதிசநாயக்கவிற்கும்,22 வீதமானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 38 வீதமானவர்கள் சஜித்பிரேமதாசவிற்கும், ரணில்விக்கிரமசிங்கவிற்கும் ஆதரவை வெளியிட்டுள்ள அதேவேளை 16 வீதமானவர்கள் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.