அம்பாந்தோட்டை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழப்பு

32 0

அம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமுதுகம பகுதியில்  காட்டு யானையின்  தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (29) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர ஹபராதுவ, கொக்கல பகுதியைச்  சேர்ந்த 27 வயதுடைய ஆணொருவராவார்.

மேலும், பொலிஸாரினால் மேற்கொண்ட  விசாரணையில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர் திமுதுகம பகுதியில்  தற்காலிகமாக வசித்து வந்தவர் எனவும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்தவர் எனவும்  தெரியவந்துள்ளது.