இலஞ்சம் பெறச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது !

72 0

மத்துகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையத்தில்  கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவர் இலஞ்சம் பெறச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்  அதிகாரிகளினால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்துகம பொலிஸ் நிலையத்திலும், மத்துகம நீதிமன்றத்திலும் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ,கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை மீட்டுக்கொடுப்பதாக  கூறி  இலஞ்சம் வாங்கச் சென்ற போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.