கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

34 0
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட நால்வரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் நால்வரும் இன்று (29) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.