வவுனியா, கற்பகபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை தனது நண்பர்களுடன் மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்டநபரொருவர் அங்கு வந்த குழுவொன்றினால் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து,காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது, சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சில்லாலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
வவுனியா வைத்தியசாலையில் சடலத்தை பார்வையிட்ட மாவட்ட நீதிபதி இது தொடாடபான வாக்குமூலங்களையும் பெற்றிருந்தார். சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.