இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்திருந்தனர்.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 17 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில், பெண் ஒருவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் இரண்டு துப்பாக்கி தாரிகளும் உள்ளடங்குகின்றனர்.
கைதுசெய்யப்பட்ட இரண்டு துப்பாக்கிதாரிகளில் ஒருவர் கடந்த 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றைய துப்பாக்கி தாரி பின்வத்தை பிரதேசத்தில் வைத்து நேற்று புதன்கிழமை (28) கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.