டென்மார்கில் கரும்புலிகள் நினைவாக 31ஆவது ஆண்டாக நடைபெற்ற உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி.

62 0

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம்
5ஆம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு திருப்பு முனைகளிலும் கரும்புலிகளுக்கென்று தனித்துவமான வீரவரலாறு உள்ளது. அவர்களின் ஒரே மூச்சு, சுதந்திரமான “தமிழீழ தேசம்”அதற்காக அவர்கள் வெடிகளைச் சுமந்து சென்று, தமது உயிரைக் கொடையாகக் கொடுத்து வீரவரலாறு படைத்தார்கள். இவர்களின் தியாகத்தை நினைவில் சுமந்து கடந்த 31 ஆண்டுகளாக டென்மார்க் தமிழீழ விளையாட்டு துறையினரால் நாடத்தப்படுகின்ற கரும்புலிகிண்ணத்திற்கான உதைப்பந்தாட்டப் போட்டி Grindsted நகரில் 24.08.2024 அன்று நடைபெற்றது. இந் நாளின் முதல் நிகழ்வாக டென்மார்க் மற்றும் தமிழீழத் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. அதன் பின்னர் கரும்புலி மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் மற்றும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வுகளை தொடந்து , 31 ஆண்டுகளாக, கரும்புலிகள் நினைவு சுமந்து நடாத்தப்படும் இச் சுற்றுப் போட்டியின் முக்கியத்துவத்தையும் மற்றும் அவர்களின் ஈகத்தையும் விளையாட்டு வீரர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதை அடுத்து இச்சுற்றுப் போட்டியின் நடைமுறைகளை அணித்தலைவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதன் பின்பு போட்டிகள் தொடங்கப்பட்டன.

இப் போட்டியில் மேற்பிரிவில் ஆண்கள் மற்றும் பென்கள் என இரு பிரிவுகளும் மற்றும் பிரிவு 2008/07 , பிரிவு 2011/12 என மொத்தமாக நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.

இச்சுற்றுப் போட்டியில் விளையாட்டு வீரர்கள் மிகவும் ஆர்வத்துடனும் விறுவிறுப்புடனும் போட்டிகளில் பங்கு பற்றியதை காணக்கூடியதாக இருந்தது.

மேற்பிரிவில் இறுதியாட்டத்தில் Dantam IF A அணியினரை எதிர்த்து போட்டியிட்ட Hobro Black அணியினர், 4-3 என்ற கோல்கனக்கில் 2024 க்கான வெற்றிக்கிண்ணத்தையும் சுழல் கிண்ணத்தையும் தமதாக்கிக் கொண்டனர்

போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் வெற்றி கிண்ணங்கள் வழங்கப்பட்டதுடன் இந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை சிறந்த முறையில் நடாத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துக் கழகங்களுக்கும் மற்றும் உதவிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, தேசியக் கொடிகள் இறக்கி வைக்கப்பட்டன. இறுதியாக” தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற எமது தாரக மந்திரத்துடன் இச் சுற்றுபோட்டி நிறைவு பெற்றது.

நாண்கு பிரிவுகளாக நடைபெற்ற உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளின் விபரங்கள்:

மேற்பிரிவு:
ஆண்கள்

முதலாம் இடம்:
Hobro Black
இரண்டாம் இடம்:
Dantam IF A
மூன்றாம் இடம்:
OTSC A

சிறந்த விளையாட்டு வீரன்:
பிராசாத் யூனியர் Dantam IF A

சிறந்த பந்துக் காப்பாளர்:
சுதன் கிருஸ்னராஜ் Hobro Black

அதிக கோல்களை அடித்தவர்:
யுவன் Dantam IF A

பென்கள்:

முதலாம் இடம்:
OTSC

இரண்டாம் இடம்:
Århus SK

சிறந்த விளையாட்டு வீராங்கனை:
நிவேதா OTSC

சிறந்த பந்துக் காப்பாளர்:
சிந்துஜா Århus SK

அதிக கோல்களை அடித்தவர்.
கரிஷா Århus SK

பிரிவு 2007/08:

முதலாம் இடம்:
Grindsted TFC

இரண்டாம் இடம்:
Dantam IF

மூன்றாம் இடம்:
Århus

சிறந்த விளையாட்டு வீரன்:
இனியவன் லெனின் Grindsted TFC

சிறந்த பந்துக் காப்பாளர்:
அனிசன் கலைதாசன் Grindsted TFC

அதிக கோல்களை அடித்தவர்:
சஞ்சை கொலம்பஸ் Dantam IF

பிரிவு 2011/12:

முதலாம் இடம்:
Dantam IF

இரண்டாம் இடம்: Grindsted TFC

சிறந்த விளையாட்டு வீரன்:
சமரன் லெனின் Grindsted TFC

சிறந்த பந்துக் காப்பாளர்:
அஸ்வின் Dantam IF

அதிக கோல்களை அடித்தவர்:
ரொசாந் மோகன் Dantam IF