ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அமைச்சரவை அல்லாத அமைச்சர் அலி சாஹிர் மௌலானாவை நீக்குவதைத் தடுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் நேற்று (28) இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவை கட்சியில் இருந்து நீக்குவதை தடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், செயலாளர் மற்றும் உயர் கட்டளைக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சுற்றாடல்துறை முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வருடம் ஒக்டோபர் மாதம், மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
அண்மையில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்த போதிலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அலி சாஹிர் மௌலானா கடந்த வாரம் அபிவிருத்தி திட்டங்கள் அமைச்சரவை அல்லாத அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.