பண்டாரவளையில் 12 வயது மகளை தீக்குச்சியால் முகத்தை எரித்து கொடூரமான முறையில் சித்திரவதை செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லியாங்கஹவெல, அம்பதன்டேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது மகளை இவ்வாறு தந்தை சித்திரவதை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையாகும்.
பண்டாரவளை அம்பதந்தேகம பிரதேசத்தின் லியங்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7ஆம் வகுப்பு பாடசாலை மாணவியின் முகம் தீக்குச்சியால் எரிக்கப்பட்ட நிலையில் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவியின் தாயார் தேயிலை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், அவருக்கு 6 வயதுடைய சகோதரியொருவர் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மாலை பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி சமையலறை குழாய்க்கு அருகில் கைகளை கழுவிக் கொண்டிருந்த போது தந்தை சிறுமியை திட்டி மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
தந்தை கைது
தீக்காயங்களுடன் குறித்த மாணவி பாடசாலை சென்ற நிலையில், சிறுமியின் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதை அதிபர் அவதானித்துள்ளார்.
உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் தந்தை பண்டாரவளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்