துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

35 0

தலாவ மெதகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (28) காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர் வரகொட தலாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தென்னை பயிரிட்டிருந்த காணியில் தனது மைத்துனருடன் பயணித்துக் கொண்டிருந்த போது, ​​குறித்த காணிக்கு நீர் எடுக்கும் குழாய் தொடர்பில் பக்கத்து காணியின் உரிமையாளருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றியதால் பக்கத்து காணியின் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்ய தலாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.