அரியநேத்திரனை ஆதரித்து வவுனியா நகரில் துண்டுப்பிரசுரம்!

41 0

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பா.அரியநேத்திரனை ஆதரித்து வவுனியாநகரில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பினரின் ஏற்ப்பாட்டில் வவுனியா பழையபேருந்துநிலைய பகுதியில் குறித்த நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், என பலரும் கலந்துகொண்டிருந்தனர்