இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக பேச்சுவார்;த்தைகள் அடுத்த வருடம் நிறைவு

426 0

536274srilank & china flags_CIஇலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக வலையம் குறித்த பேச்சுவார்த்தைகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் அளவில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக, சீனா அரசாங்க பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.

உத்தேச சுதந்திர வலையத்தின் ஊடாக, தேயிலை, ஆடை, இரத்தினக்கற்கள், ஆபரணங்கள், றப்பர், தெங்கு மற்றும் வாசனைத்திரவியங்கள் என்பவற்றின் ஏற்றுமதிகள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், 15 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சீனாவின் முதலீட்டில், முதலீட்டு வலயம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான காணியை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேநேரம், சீனாவுக்கு மேலதிகமாக இந்தியா மற்றும் சிங்கபூர் ஆகிய நாடுகளுடனும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ளவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.