படகு பறிமுதல் உடன்படிக்கையை ரத்து செய்ய கோரிக்கை

339 0

ramadas_CIஇலங்கையில் இருந்து தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்களின் படகுகளை விடுவித்துக் கொள்வதற்கு, இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள படகு பறிமுதல் உடன்படிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ். ராம்தாஸ் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க உத்தரவிட்டுள்ள போதும், 100க்கும் மேற்பட்ட படகுகளை விடுவிக்க அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு 2003ம் ஆண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட படகுபறிமுதல் உடன்படிக்கையே காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உடன்படிக்கையின்படி, கைது செய்யப்படுகின்ற மீனவர்களை விரைவில் விடுவிக்கவும், படகுகளை வழக்கு தீரும் வரையில் தடுத்து வைக்கவும் இந்தியா இணங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.