இலங்கை வரவுள்ள கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஸ்ரெபன் டியோன், நாளையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
இன்று இரவு அவர் இலங்கை வருவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
நாளையும் நாளை மறுதினமும் இலங்கையில் தங்கி இருக்கும் அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர், வெளிவிவகார அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் ஆகியோரையும், அமைச்சர் மனோகணேசன் உள்ளிட்டவர்களையும் கொழும்பில் வைத்து சந்திக்கவுள்ளார்.
நாளை மறுதினம் யாழ்ப்பாணம் செல்லும் அவர், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும், ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோரையும் சந்திக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
13 வருட இடைவெளியின் பின்னர் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.