இரத்த அழுத்தம், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் செயற்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க தீர்மானம்

19 0

இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தல் செயற்திட்டத்திற்காக எதிர்வரும் வருடங்களில் அதிகளவு நிதியை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அதேவேளை, ஆரம்ப சுகாதார சேவைக்கு ஒதுக்கப்படும் நிதியை அடுத்த வருடத்தில் மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மேலாக நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடை க்கான வினாக்கள் வேளையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹிணி குமாரி கவிரத்ன  எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

நாடளாவிய ரீதியில்  இரத்த அழுத்த நோய் மற்றும் நீரிழிவு நோயாளர்கள் பெரும்பாலாக காணப்படுகின்றனர். குறிப்பாக வயது முதிர்ந்தவர்களில் நூற்றுக்கு 45  வீதத்துக்கும் அதிகமானோர் இரத்த அழுத்த நோய்க்கு உள்ளாகி யுள்ளனர்.

அதனால்  இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தல் செயற்திட்டத்திற்காக எதிர்வரும் வருடங்களில் அதிகளவு நிதியை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் ஆரம்ப சுகாதார சேவைக்கு ஒதுக்கப்படும் நிதியை அடுத்த வருடத்தில் மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மேலாக நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும்.

அதேபோன்று வயது முதிர்ந்தவர்களில் நூற்றுக்கு 24 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் சிறுநீரக பாதிப்புகளும் அதிகரித்துள்ளன என்றார்.