மக்கள் போராட்ட முன்னணியின் பிரசார நடவடிக்கைகள் வசந்த முதலிகேவின் பங்கேற்புடன் இன்று புதன்கிழமை (21) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் மக்கள் போராட்ட முன்னணியின் கொள்கைகளை விளக்கும் துண்டுப்பிரசுரங்கள் இன்று காலை விநியோகிக்கப்பட்டன.
இதன்போது மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அரகலய போராட்ட குழுவினருடன் இணைந்து முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனினிஸ கட்சி, சோசலிச மக்கள் மன்றம், உள்ளிட்ட ஜனநாயக சிவில் சமூகத்தினர் இணைந்து தேர்தல் அரசியலில் களமிறங்கியுள்ளனர்.
மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நூவான் போபகே குடைச் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.