ஒரு நாளைக்கு 7 மணிநேரம் நடந்தால் ரூ.28,000 வழங்கும் டெஸ்லா நிறுவனம்.. ஏன் தெரியுமா?

32 0

தொழிலதிபர் எலான் மஸ்க் சிஇஓ ஆக உள்ள பிரபல வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனம் வேலைக்கு ஆட்கள் எடுத்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் 7 மணிநேரம் நடப்பதுதான் அந்த வேலை. அதற்கு நாள் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 28,000 ரூபாய் சம்பளமாகவும் டெஸ்லா நிறுவனம் வழங்குகிறது. இதற்கு 5’7 முதல் 5’11 வரை உயரம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

வாகனங்கள் தயாரிப்பதைத் தவிர்த்து அதிநவீன அறிவியல் சாதனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் மனிதனைப் போன்ற ஹியூமனாய்ட் ஆப்டிமஸ் ரோபோக்களை டெல்சா தயாரித்து அதை மனிதர்கள் செய்யும் விஷயங்களைச் செய்யப் பழக்கி வருகிறது. அப்படி அந்த ரோபோவுக்கு மனிதர்களின் செயல்பாடுகளைச் சொல்லித் தரவே இந்த வேலை.

இதன்படி அசைவுகளைப் பிரதியெடுக்கும் மோஷன் கேப்ச்யூர் சூட் உடையையும் VR ஹெட் செட்டையும் அணிந்து கொண்டு நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் நடக்க வேண்டும்.

அப்படி நடக்கும்போது அந்த அசைவுகளை ரோபோவுக்கு கற்றுத் தர முடியும். டெஸ்லா நிறுவன தலைமையகம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் இந்த வேலைக்கு அப்ளிகேஷன்கள் குமிந்து வருகிறது.