அமெரிக்க அதிபர் தீர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வேட்பளராக களம் காண்கிறார். அமரிக்கா மாகாணங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் டிரம்ப் நேற்று பென்சில்வேனியா மாகாணத்தில் நடத்த பிரச்சார கூட்டத்தில் பேசும்போது தொழிலதிபர் எலான் மஸ்கின் அறிவுத்திறன் குறித்து புகழ்ந்து பேசினார்.
மேலும் மஸ்க் விருப்பப்பட்டால், தான் அதிபர் தேர்தலில் வென்றதும் அவருக்கு மந்திரி பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு எலான் மஸ்க் எப்போதும்போல தனது பாணியில் எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார். கோட் சூட்டுடன் மிடுக்காக மேடையில் பதவியேற்பதுபோன்ற தனது ஏஐ புகைப்படத்தை பகிர்ந்துள்ள மஸ்க், ‘சேவையாற்ற நான் விரும்புகிறேன்’ [I am willing to serve] என்று பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் DOGE [Department of government efficiency] என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. முன்னதாக அரசின் செயல்திறனை ஊக்குவிக்கும் அமைச்சகம் என்று ஒன்றை உருவாக்கி அதன் மந்திரியாக எலான் மஸ்க்கை நியமித்தால் நன்றாக இருக்கும் என்று இணையத்தில் பலர் கருத்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
I am willing to serve pic.twitter.com/BJhGbcA2e0— Elon Musk (@elonmusk) August 20, 2024 Perfect name https://t.co/qOUblToy7v— Elon Musk (@elonmusk) August 20, 2024 “,