அமெரிக்க இராஜாங்க பதில் உதவி செயலர் இலங்கை வருகை

17 0
சமுத்திரம், சர்வதேச சூழலியல் விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க பதில் உதவி செயலர் ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள னெிபர் ஆர். லிட்டில்ஜோனை அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அவரை சந்தித்து வரவேற்றுள்ளார்.

லிட்டில் ஜோன் 17 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இலங்கை, இந்தியா, மற்றும் மாலைதீவு ஆகிய இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (19) இலங்கைக்கு வருகை தந்த லிட்டில் ஜோன் இலங்கையில் உள்ள அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இதன்போது இயற்கை மற்றும் கடற்பாதுகாப்பு, பிளாஸ்டிக் மற்றும் வளி மாசடைவு, காலநிலை மாற்ற நெருக்கடி, காடழிப்பு, சிவில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள், விஞ்ஞான தொழில்நுட்ப நடவடிக்கைகளில் பெண்களை ஊக்குவித்தல், நிறைபேறான கடற்பிராந்தியப் பாதுகாப்புடன்கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மூன்று நாடுகளினதும் உயர்மட்டப்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

அதேவேளை இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து 21 – 28 ஆம் திகதி வரை இந்தியாவுக்கும், 28 – 30 ஆம் திகதி வரை மாலைதீவுக்கும் ஜெனிஃபர் ஆர்.லிட்டில்ஜோன் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.