அரசாங்கத்தின் அந்த முடிவு வெட்கப்பட வேண்டிய விடயம்

246 0

மீதொட்டமுல்லை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையானது வெட்கப்பட வேண்டிய விடயம் என, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மேலும் அது கைவிடப்பட வேண்டிய யோசனை எனவும் அவர் கூறியுள்ளார். பொரள்ளை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

நஸ்டஈடாக வழங்குவது அமைச்சர்களுடைய அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுடைய பணம் அல்ல எனக் குறிப்பிட்ட தினேஷ் குணவர்த்தன, அது மக்களுடைய பணமே எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த அனர்த்தத்தில் மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு நியாயமாக நஸ்டஈட்டை வழங்குவது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நடந்த சம்பவம் தொடர்பில் 7 விடயங்களை முன்னிருந்தி சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை வழங்க நேற்று நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது தொடர்பில் அவசர பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்த சபாநாயகர் விருப்பத்துடன் உள்ளதாகவும் தினேஷ் குணவர்த்தன இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.