ஆளுமை இல்லாத தலைவர்களை மக்கள் ஆதரிக்கப்போவதில்லை

22 0

நாடு வீழ்ச்சியடையந்திருந்த போது பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள பின்வாங்கிய சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார , தேர்தலில் வெற்றிபெற்று எவ்வாறு நாட்டை நிரவகிக்க முடியும்? அதனால் ஆளுமை இல்லாத தலைவர்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாட்டையும் மக்களயைும் பாதுகாத்த ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது என ஐக்கிய தேசிய கட்சியில் புதிதாக இணைந்துகொண்ட ஜாதிக்க ஹெல உறுமயவின் முன்னாள் பிரதித் தலைவர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் ஞாயிறுக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கோத்தாபய ராஜபகஷ்வின் பிழையான தீர்மானங்களால் நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தபோது, ஏற்பட்ட மக்கள் போராட்டம் காரணமாக அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்பதவி விலகினார். பிரதமர் பதவி விலகினால். சம்பிரதாய முறைப்படி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரே அரசாங்கத்தை பொறுப்பேற்க முன்வர வேண்டும். ஆனால் அன்று சஜித் பிரேமதாச நாட்டை பொறுப்பேற்க முன்வரவில்லை. அப்போது நாட்டின் அந்னிய செலாவனி 20 அமெரிக்க டொலர்களே எஞ்சியிருந்தது. அதனால்தான் சஜித் பிரேமதாச பொறுப்பேற்க அச்சப்பட்டார். அனுரகுமார திஸாநாயக்கவும் அச்சப்பட்டார்.

இவ்வாறான நிலையில், ரணில் விக்ரமசிங்க தைரியமாக முன்வந்து பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் போராட்டக்காரர்களின் அழுத்தம் காரணமாக கோத்தாபய ராஜபக்ஷ் நாட்டைவிட்டு சென்றுவிட்டபோது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இடைக்கால ஜனாதிபதியாக பதவியை ஏற்றுக்கொண்டு, பின்னர் பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை வாக்குகளுடன் ரணில் விக்ரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக தெரிவானார். அவர் தைரியமாக சவால்களை எதிர்கொண்டு, நாட்டை ஓரளவு ஸ்திர நிலைக்கு கொண்டுவந்தார்.

ரணில் விக்ரமசிங்க அன்று இந்த நாட்டை பொறுப்பேற்றிருக்காவிட்டால், நாடு திசைக்கு சென்றிருக்கும் என யாராலும் நினைத்துப்பார்க்க முடியாமல் போயிருக்கும். பங்களாதேஷை விட மோசமான நிலைக்கு நாங்கள் சென்றிருக்கும்.  ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பினாலே நாடு பாதுகாக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் எதிர்கொண்டுவந்த கஷ்ட நிலை தற்போது இல்லை. அந்த நிலைக்கு மாற்றியமைத்தது ரணில் விக்ரமசிங்கவாகும்.

நாடு தற்போது ஸ்திர நிலைக்கு வந்துள்ள நிலையில்,  சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க  போன்றவர்கள் தற்போது, நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தங்களுக்கு வழங்குமாறு கோரி வருகின்றனர். சவால்களை எதிர்கொள்ள முடியாத இவர்கள் எவ்வாறு நாட்டை ஆட்சி செய்ய முடியும்?. நாடு மீண்டும் வீழ்ச்சியடைய இடமளிக்க முடியாது.

அதனால் மக்கள் ஒருபோதும் இவர்களுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை. ரணில் விக்ரமசிங்கவுடன் தற்போது சிறந்த அணி ஒன்று இருக்கிறது. நாடு வீழ்ச்சியடைந்தபோது, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த அணியே நாட்டை தற்போது கட்டியெழுப்பி இருக்கிறது.

ரணில் விக்ரமசிங்கவுடன் இருப்பவர்கள் அனைவரும் திருடர்கள் என்ற பிரசாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் கடந்த அரசாங்கத்தில் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டடிருந்த சிலர் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனே இருக்கின்றனர்.

அவர்களுக்கும் குற்றச்சாட்டு இருக்கிறது. அதனால் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்காதவரை யாரையும் திருடர்கள் என தெரிவிக்க முடியாது. இவர்களின் குற்றச்சாட்டுக்களை மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதனால் தற்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது என்றார்.