கமலா ஹாரிஸ்க்கு எதிராக விவாதத்தை வலுப்படுத்த இந்து பெண் தலைவர் உதவியை நாடிய டொனால்டு டிரம்ப்

26 0

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 5-ந்தேதி நடக்க உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விலகியதால், ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் களம் இறங்குகிறார்.போட்டியிடும் வேட்பாளர்கள் தனியார் செய்தி நிறுவனங்கள் நடத்தும் நேருக்கு நேர் விவாதங்களில் பங்கேற்பது வழக்கம்.

அப்படி நடைபெற்ற முதல் விவாதத்தின்போது டொனால்டு டிரம்பிற்கு எதிராக ஜோ பைடன் தினறியதால்தான் அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகி, கமலா ஹாரிஸை பரிந்துரை செய்தார்.இந்த நிலையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10ம்தேதி ஏபிசி செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள விவாத நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்பும், கமலாவும் நேருக்குநேர் விவாதம் நடத்த உள்ளார்.விவாதத்தில் கமலா ஹாரிஸை வீழ்த்த டொனால்டு டிரம்ப் திட்டம் வகுத்து வருகிறார். விவாதத்திற்கான பயிற்சி செசன் நடத்தப்படும்.

இதில் தனியார் கிளப் உள்ளிட்டவை ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் இந்து அமெரிக்கரான துளசி கபார்டு டொனால்டு டிரம்பின் பயிற்சி செசனில் இணைந்துள்ளார்.கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலின்போது நடந்த விவாதத்தில் கமலா ஹாரிஸை தோற்கடித்தவர், ஜனநாயக கட்சியை கபார்டு. ஜனநாயகக் கட்சியில் முக்கிய புள்ளியாக இருந்தவர் துளசி. ஹவாய் மாவட்டத்தின் அரசு பிரதிநிதியாக இருந்தவர். இவரும் கடந்த (2020) அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விரும்பினார்.

இதற்கென உட்கட்சி தேர்தல் 2019-ல் நடந்தபோது, களத்தில் இருந்த கமலா ஹாரிஸ்க்கும் துளசிக்கும் விவாதம் நடந்தது. இதில் கமலாவை விட சிறப்பாக செயல்பட்ட துளசி, விவாதத்தில் வெற்றி பெற்றாார்.பின்னர் துளசி ஜனநாயக கட்சியில் இருந்து 2022-ம் ஆண்டு வெளியேறினார். இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் அவரை தனது பயிற்சி செசனில் சேர்த்துள்ளார்.டிரம்பின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறுகையிலா் \”அரசியல் வரலாற்றில் சிறந்த விவாதம் செய்பவர்களில் ஒருவராக டிரம்ப் நிரூபிக்கப்பட்டுள்ளார்.

இது ஜோ பைடன் உடனான விவாதம் மூலம் நிரூபணம் ஆனது. அவருக்கு பாரம்பரிய விவாததத்திற்கான தயார்படுத்துதல் (பயிற்சி) தேவையில்லை. ஆனால் 2020-ல் விவாத மேடையில் கமலா ஹாரிஸ்க்கு எதிராக வெற்றிகரமாக ஆதிக்கம் செலுத்திய துளசி கபார்டு போன்ற மரியாதைக்குரிய கொள்கை ஆலோசகர்கள் மற்றும் திறமையான தொடர்பாளர்களை சந்திப்பேன் ” என்றார்.2019-ம் ஆண்டு விவாதத்தின்போது துளசி “கமலா ஹாரிஸ் சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட அட்டார்னியாக இருந்தபோது, 1500-க்கும் மேற்பட்டோரை கஞ்சா (marijuana) விவகாரத்தில் விதிமுறை மீறியதாக சிறையில் அடைத்தார்.

அதன்பின் அவரிடம் நீங்கள் எப்போதாவது கஞ்சா புகைத்தீர்களா? என்ற கேள்விக்கு சிரிப்பை வெளிப்படுத்தினார்\” என குற்றம் சாட்டியிருந்தார்.