பிவிதுரு ஹெல உருமயவிலிருந்து விலகிய குழு ஜனாதிபதிக்கு ஆதரவு!

22 0

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு தரப்பினரும் பிரதான வேட்பாளர்களுடன் இணைந்து அவர்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் முன்னாள் பிரதி பொதுச் செயலாளர் உபுல் கோனார மற்றும் அக்கட்சியின் உறுப்பினரான ஆராச்சிகும்புரே சோபித தேரர் ஆகியோர் தலைமையிலான குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

கடந்த நெருக்கடிகளின் போது பிவிதுரு ஹெஉருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தியதாகவும், எனினும் அவர் அவற்றை புறக்கணித்தமையால் தாம் ஜனாதிபதியை ஆதரிக்க தீர்மானித்தாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.