மீதொட்டமுல்ல அனர்த்தம் – ஆராய நீதிபதிகள் குழு அமைக்கப்படும் – ஜனாதிபதி

262 0

மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் ஒரு மாதகாலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் உரிமையாளர்களை ஜனாதிபதி மாளிகையில் இன்று சந்தித்து கலந்துரையாடுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

5 பில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீட்டுடன் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான நிலையை அடைந்துள்ளதுடன் நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் பயணிக்கின்றது.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரச நிறுவனங்கள் மற்றும் அரசாங்க பதவிகளில் முக்கிய மாற்றங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் பல புதிய முறைகளும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அண்மையில் மீதொட்டமுல்லையில் இடம்பெற்ற குப்பைமேடு சரிவு தொடர்பில் முக்கிய சூத்திரதாரிகளை அறிவதற்காக முன்னாள் நீதிபதிகள் அடங்கிய குழுவொன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் ஒரு மாதகாலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.

கணக்காய்வு சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க, சம்பந்தப்பட்ட தரப்புக்கு ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் இச் சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.