தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகள் தெரிவு

27 0

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சின்வட்டிராவின் மகள் பேடொங்டர்ன் சின்வட்டிரா அந்த நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

37 வயதான இவர் தாய்லாந்தின் இளம் பிரதமர் என்பதுடன்  இரண்டாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள்பிரதமரை அரசமைப்பு நீதிமன்றம் பதவி நீக்கம் செய்துள்ளதை தொடர்ந்தே இவர் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இருவரும் பியுதாய் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்சி 2023 தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள போதிலும்  ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்துள்ளது.

தாய்லாந்தின் ஸ்தம்பிதநிலையில் உள்ள பொருhளாதாரத்தை மீட்டெடுப்பது,முன்னைய அரசாங்கங்களிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய இராணுவசதிப்புரட்சி , நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்ப்பது போன்ற சவால்களை புதிய பிரதமர் எதிர்கொள்கின்றார்.