அவுஸ்திரேலியாவில் இலங்கை இராஜதந்திரியின் வீட்டில் பணிபுரிந்த பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதி

44 0

ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர் இலங்கை இராஜதந்திரியின் வீட்டில் பணியாற்றுவதற்காக பிரியங்கா தனரட்ண  இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா வந்தவேளை அவர் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்பட்டார்.

30 வயது மதிக்கத்தக்க அவர் முன்னர் ஒருபோதும் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டதில்லை.

எனினும், அவர் கான்பெராவிற்கு வந்து அடிமைத்தனம் மிக்க  ஏற்பாட்டில் சிக்குண்ட வேளை அவரது நம்பிக்கைகள் தகர்ந்தன என்கின்றார் கிளேட்டன் உட்ஸ் என்ற சட்டநிறுவனத்தின் பங்காளர்களில் ஒருவரான டேவிட் ஹிலார்ட்.

அவ்வேளை  அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் பிரதி  தூதுவராக பணியாற்றிய ஹிமாலி அருணதிலகவின் வீட்டில் 2015 முதல் 2018 வரை தனரட்ண வேலைக்கு அமர்த்தப்பட்டார்.

மூன்று வருடங்களும் அவர் ஏழு நாளும் வேலை செய்தார்,அந்த காலப்பகுதியில் இரண்டுநாட்கள் மாத்திரம் விடுப்பு வழங்கினார்கள் ,உணவு சமைக்கும் போது தனது கையை சுட்டுக்கொண்டதால் அந்த இரண்டு நாட்களும் விடுப்பு வழங்கினார்கள் என்கின்றார் டேவிட் ஹிலார்ட்.

அடுத்த மூன்று வருட காலப்பகுதியிலும் அவருக்கு 11,211 அமெரிக்க டொலர் சம்பளத்தினை மாத்திரம் வழங்கியுள்ளனர்.

அந்த பெண் மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக வேலை செய்தார் ஒரு நாளைக்கு 65 சதம் வழங்கியுள்ளனர் என்கின்றார் டேவிட் ஹிலார்ட்.

இலங்கை பெண் அவுஸ்திரேலியாவில் வேலைபார்க்க ஆரம்பித்தவேளை அவுஸ்திரேலியாவின் அடிப்படை ஊதியம் 38 மணித்தியாலங்களிற்கு 656 டொலராக காணப்பட்டது.

அவருக்கு குறைந்த சம்பளம் வழங்கப்பட்டது,அனுமதிக்கப்பட்டதை விட அதிக நேரம் அவர் வேலைபார்த்துள்ளார் என தெரிவிக்கும் டேவிட் ஹிலார்ட். இது அவுஸ்திரேலியாவின் சட்டங்களிற்கு முரணாணது என தெரிவிக்கின்றார்.

இலங்கை பெண்ணிற்கு வேலையின் இடையே ஓய்வெடுப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை,மேலதிக நேரம் வேலைபார்த்தமைக்காக மேலதிக பணத்தை வழங்கவில்லை,சம்பளம் குறித்த ஆவணம் வழங்கப்படவில்லை,இவை அனைத்தும் நியாயமான வேலைக்கான சட்டத்தை மீறும் நடவடிக்கை என்கின்றார் அவர்.

இது நவீன அடிமைத்தனத்திற்கான உதாரணம் என தெரிவிக்கும் அவர், பலவீனமான நிலையில்  உள்ள ஊழியர்கள் தங்கள் வாழ்க்கை என்பது வேலையை தவிர வேறு எதுவுமில்லை என்ற நிலையில் சிக்கிக்கொள்கின்றார்கள்,தப்பிக்க முடியாத வேலையில் சிக்கிக்கொள்கின்றார்கள்.என்கின்றார் அவர்.

நியாயமான வேலை சட்டம் குறித்த சிவில் வழக்கில் டேவிட் ஹிலார்ட் பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணிற்காக ஆஜரானார்,  இலங்கையின் பிரதி தூதுவர் ஹிமாலிக்கு எதிரானது இந்த வழக்கு.

ஹிமாலி தனது ஊழியருக்கு குறைவான சம்பளத்தை வழங்கினார் என குற்றம்சாட்டப்பட்டது.

இது குறித்த தீர்ப்பை வியாழக்கிழமை வழங்கியுள்ள அவுஸ்திரேலிய நீதிமன்றம்,ஹிமாலி அருணதில அவுஸ்திரேலிய வேலைசட்டங்களின்படி ஊதியம் வழங்காதது உட்பட நியாயமான வேலை சட்டத்தை பல விதத்தில் மீறியுள்ளார் என தீர்ப்பளித்துள்ளது.

செலுத்தப்படாத ஊதியத்திற்காக $374,000  வழங்கவேண்டும் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய நீதிமன்றம் ,வட்டியாக மேலதிகமாக 169000டொலரை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.மொத்தமாக அவர் 543,000. டொலர்களை செலுத்த வேண்டும்.

ஹிமாலி அருணதிலக தற்போது ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவராக பணிபுரிகின்றார்.

அவர் தற்போது ஜெனீவாவில் மிக மூத்த இராஜதந்திரியாக பணியாற்றுகின்றார்,அவர் இவ்வாறு செயற்பட அனுமதிக்கப்பட்டமை முற்றிலும் பயங்கரமானது என நான் கருதுகின்றேன் என்கின்றார் ஹிலார்ட்.