தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் சதுரங்க அபயசிங்க நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய வரிமுறைமை தகவல்தொழில்நுட்ப துறையினரை தவிர ஏனைய அனைவருக்கும் பாதகமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தபட்ச வருமான வரிவரம்பை இரண்டு இலட்சமாக அதிகரிப்போம் என தெரிவித்துள்ள அவர் எங்கள் அரசாங்கத்தின் தொழிலாளர் ஒருவர் வரிகுறைப்பையும் கல்வி சுகாதார சேவைகளிற்கான செலவீங்களை குறைப்பதையும் காணமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார முறையை உரிய விதத்தில் நடைமுறைப்படுத்தினால் செலவுகளை குறைக்கலாம் என தெரிவித்துள்ள அவர் இதன் மூலம் அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் எங்களின் வாழ்க்கை தரத்தினை அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.