வடகொரியாவுக்கு சீனா கண்டனம்

246 0

வடகொரியாவின் அணுவாத விரிவாக்கல் செயல்முறைகள் தொடர்பில் சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட வடகொரியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர், தங்களின் ஏவுகணைச் சோதனைகளை நிறுத்தப் போவதில்லை என்று கூறி இருந்தார்.

மேலும் அமெரிக்கா தாக்குதல்களை திட்டமிடும் பட்சத்தில், அதற்கெதிராக அணுவாயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

இது தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள சீனாவின் வெளிவிவகார அமைச்சு, இவ்வாறான கருத்துக்கள் மூலம் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.