பிரான்சில் புதிய ஜனாதிபதி தேர்வில் நாங்களும் பங்குதாரராக மாறுவோம்.

287 0

பிரான்சில் சில மாதங்களாக இந்த நாட்டின் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதில் பிரான்சின் அடுத்த பிரதமர் யார் என்ற விடயத்தில் தேர்தல் பிரச்சாரங்கள், விவாத மேடைகள், தினமும் தொலைக்காட்சி செய்திகளில் தேர்தலுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.இந்த சூழலில் இந்த நாட்டின் பிரஜைகளாக மாறியிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர் ஆகிய நாம் – இந்த தேர்தலில் நாமும் எமது வாக்குகளை பதிவு செய்வதன் மூலம் இந்த நாட்டின் எதிர்கால வளச்சிக்கும் எமது நன்மைக்கும் தாயகத்தில் எமது மக்களின் நன்மைக்கும் ஏற்ற அதிபரை தெரிவு செய்வதில் நாம் பங்காளிகள் ஆகலாம்.

2009 வரை யான கணிப்பீட்டின் படி இந்த நாட்டுக்கு அகதிகளாக வந்த எம்மவர்களின் 161930 க்கு அதிகமானோருக்கு அகதி அந்தஸ்து அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கணிப்பீட்டின் படி பார்ப்போமானால், இந்த நாட்டில் 300000 ஈழத்து தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று நாம் கணிப்பீட்டு கொள்ளலாம்.இந்த வகையில் பிரஞ்சு குடியுரிமை பெற்றவர்களாக நாம் பல்லாயிரம் பேர் இருக்கிறோம் என்றும் எம்மால் இந்த நாட்டு அரசியல் மாற்றத்தில் நாமும் முக்கிய பங்கு வகிக்கிறோம் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்த தேர்தல் காலத்தை தமிழராகிய நாம் எவ்வாறு கையாளப்போகிறோம் . தமிழ் மக்கள் இந்த நாட்டில் சுதந்திரமாகவாழ்வதற்கும் . தாயகத்தில் எமது மக்களின் சுதந்திரமான வாழ்விற்கும் எவ்வாறும் நாம் பயன்படுத்தப்போகிறோம் என்பதை இப்போது இருந்தே நாம் சிந்திக்கவேண்டும்.தமிழ்மக்களுக்கான நீதி எவ்வாறு அமையப் போகிறது என்ற சூழலின், எமக்கு ஐக்கிய நாடுகள்சபையின் அங்கத்துவ நாடுகளின் ஆதரவுகள் தேவைப்படும் சூழலில்- பிரான்சில் ஏப்ரல் – மே 2017 நடைபெற இருக்கும் ஜனாதிபதிக்கான தேர்தலும், அதன் பின் வர இருக்கும் பாராளுமன்றதேர்தலிலும், தமிழர்களாகிய நாம் எமது வாக்குகளை எவ்வாறு பயன்படுத்தப் போகின்றோம் என்பதிலேயே தங்கி இருக்கின்றது.

பிரான்சில் பிரஞ்சு பிரஜாவுரிமையை பெற்று வாழும் எமது சமுதாயத்தினர் பலர் இந்நாட்டுஅரசியலில் ஈடு பட்டு மாநகரசபைகளில் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றனர். அதே நேரத்தில் பிரஞ்சு பிராஜாவுரிமையை பெற்றும் அதனால் எமக்கு கிடைத்து இருக்கும்வாக்குரிமையை பயன்படுத்தாமல் நாம் இருக்கிறோம், இந்த நாட்டில் குடியுரிமை பெற்றவர்களாக வாழும் நாம் இங்கே எமது வாழ்வியலுக்கு எமது மக்களின் வாழ்வியல் பாதுகாப்புக்கும் நாம் அளிக்கப்போகும் வாக்குகள் பயனுள்ளதாக இருக்கும். எமக்கு இங்கு தரப்பட்டு இருக்கும் உரிமையை நாம் சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும்.

நாம் தெரிவு செய்யும் தலைமைத்துமை எமது மக்களின் விடுதலைக்கும் ஆதரவு கரம் தரக்கூடியவராக நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு நாம் வாக்களிக்க வேண்டியாது அவசியமாகிறது.அத்துடன் இந்த நாட்டின் வாக்குரிமையை பெற்று வேற்று நாடுகளில் வாழப்பவர்களும் அந்த நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமது வாக்குக்களை பதிவு செய்யலாம்.எமக்கு தரப்பட்டு இருக்கும் இந்த உரிமையை நாம் பயன்படுத்துவோம்.

மேலதிக விபரங்கள் அறிய தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு. 06 52 72 58 67

செய்தி

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.