திட்டமிட்டபடியே மகிந்த கூட்டு எதிரணியினரின் பேரணியானது எதிர்வரும் 28ஆம் திகதி திட்டமிட்டபடியே நடக்கும் என கூட்டு எதிரணியினர் அறிவித்துள்ளனர்.
பொது எதிரணியினரால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பொது எதிரணியினரால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்பேரணியில் சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்களம், தமிழ், முஸ்லிம் உட்பட அனைத்து இன மக்களின் பேராதரவுடன் நடக்கும் இப்பேரணியில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என மகிந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.
ஆகவே இந்தப் பாதயாத்திரையே இலங்கையின் வரலாற்றில் தடம்பதிக்கப்போகும் முக்கிய நிகழ்வெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.