இராஜகிரியவில் ஆயுதங்களுடன் 7 பேர் கைது!

29 0
இராஜகிரிய பிரதேசத்தில் ஆயுதங்களுடன் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் சிறைக்காவலர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர்களிடமிருந்துT56 துப்பாக்கி, மைக்ரோ ரக துப்பாக்கி, 300 T56 ரக துப்பாக்கிகள் மற்றும் 50 9mm தோட்டாக்கள் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.