ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளராக ராம் நியமனம் !

35 0
ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளராக கட்சியின் வடகொழும்பு பிரதான அமைப்பாளரும் மேல்மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான கலாநிதி சி.வை.பி ராம் நியமிக்கப்படுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி யாப்பில் கட்சியின் தலைவருக்கு  வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கமைய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் 2024 ஆம் ஆண்டுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதுதொடர்பான நியமனக்கடிதம் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச வெள்ளிக்கிழமை கையளித்துள்ளார்.

அதன் பிரகாரம் இந்த பதவியின் கீழ் சாட்டப்பட்டிருக்கும் விடயங்கள் மற்றும் பொறுப்புக்களை உங்களால் சிறப்பாக மேற்கொள்ள முடியும் என தான் எதிர்பார்ப்பதாக சஜித் பிரேமதாச அவருக்கு கையளித்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.