இரணைமடுக்குள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் மற்றும் இரணைமடு அணைக்கட்டு வேலைத்திட்டம் ஆகியவற்றின் வேலை முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலக கேப்போர் கூடத்தில் நடைபெற்றது
இன்று பிற்ப்பகல் இரண்டு முப்பது மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி . சிறிதரன் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தார்
இக் கலந்துரையாடலில் இரணைமடுக்குள கீழ் கட்டமைப்பு அபிவிருத்திகளான பாலவேலைகள் , வடிகாலமைப்பு மற்றும் இரணைமடு அணைக்கட்டு வேலைத்திட்டம் ஆகியவற்றின் வேலை வேகமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இப்பொழுது ஏற்ப்பட்ட சில காலநிலை மாற்றங்களால் வேளையில் சிறிய தாமதம் ஏற்ப்பட்டு உள்ளதாகவும் தொடர்ந்தும் வேகமான முறையிலே வேலைத்திட்டங்கள் நடைபெறும் எனவும் பேசப்பட்டது அத்துடன் வேலைகள் முடிவு பெற்றதும் இரணைமடுக்குள அணைக்கட்டின் தோற்றங்கள் மற்றும் கீழ் கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பாக விளக்கப்படங்களுடன் இவ் கலந்துரையாடல் நடைபெற்றது
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி . சிறிதரன் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் , கமக்கார அமைப்புக்களின் பிரதி நிதிகள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்