நாய்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் ; பிரித்தானிய முதலை நிபுணருக்கு சிறை

31 0

பல நாய்களை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதை செய்த பிரபல பிரித்தானிய விலங்கியல்  நிபுணருக்கு  அவுஸ்திரேலியாவில் 10 ஆண்டுகள் மற்றும் ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

53 வயதுடைய பிரபல நபரான ஆடம் பிரிட்டன் மிருகவதை மற்றும் விலங்கு கொடுமை தொடர்பான 56 குற்றச்சாட்டுகளை ஒப்புகொண்டுள்ளார்.

பிரிட்டன் விலங்குகளை சித்திரவதை செய்வதை படமெடுத்துள்ளார். அதன்போது, விலங்குகள் உயிரிழந்துள்ளன. புனைப்பெயர்களைப் பயன்படுத்தி வீடியோக்களை ஒன்லைனில் பகிர்ந்துள்ளார்.

புலனாய்வாளர்கள் அவரது வீடியோ ஒன்றில் துப்பு கண்டுபிடிக்கும் வரை அவரது குற்றங்கள் பல ஆண்டுகளாக கண்டறியப்படவில்லை.

கடந்த 2022 ஆம் ஆண்டு டார்வினுக்கு அருகிலுள்ள கிராமப்புறத்தில் கைது செய்யப்பட்டார்.

பிரிட்டன்  மேற்கு யார்க்ஷயரைச் சேர்ந்தவராவார். இரண்டு தசாப்தங்களுக்கு முதலை தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்வதற்கு முன்பு தனது ஆரம்ப ஆண்டுகளை இங்கிலாந்தில் வாழ்ந்துள்ளார்.

கலாநிதி  பட்டம் பெற்ற உயர் தகுதி வாய்ந்த விலங்கியல் நிபுணரான பிரிட்டன், தனது துறையில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

லைஃப் இன் கோல்ட் ப்ளட் ஆவணப்படத் தொடரின் ஒரு பகுதியின் படப்பிடிப்பின் போது இயற்கை ஆர்வலர் சர் டேவிட் அட்டன்பரோவிற்கு தனது வீட்டில் விருந்தளித்தார்.