இந்திய – இலங்கை மீனவர்கள் விடயத்தில் அரசியல் தாக்கம் அதிகம்

278 0

இந்திய – இலங்கை மீனவர்கள் விடயத்தில் விஞ்ஞானத்தை விட அரசியல், அதிக தாக்கம் செலுத்துவதால், அந்த பிரச்சினையை தீர்க்க முடியாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தைச் சேர்ந்த கடல் வள விஞ்ஞானியான மார்ட்டன் பாவின்க், கொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் எல்லைக் கடப்பதால், இலங்கையின் வடக்கில் உள்ள 25 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவ குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.

எனவே தமிழக அரசாங்கம் தமது மீனவர்களை எல்லைத்தாண்டுவதை நிறுத்த வேண்டும்.

மேலும் நீண்டகாலமாக தொடரும் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு விஞ்ஞானப்பூர்வமான தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.