இலங்கை பிரதமர் இந்தியா செல்ல உள்ளார்

283 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 12ஆம் திகதி இலங்கை வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக பிரதமர் இந்தியா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.