மின்னேரியா, ஜயந்திபுர, தம்பலவெவ பகுதிக்கு வழங்கப்படும் நீர் சேரும் சகதியுமாக காணப்படுவதாக ஆகஸ்ட் மாதம் 1 ஆம் மற்றும் 2 ஆம் திகதிகளில் ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது.
இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,
மின்னேரியா நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் ஜயந்திபுர, தம்பலவெவ பகுதிக்கு நீர் வழங்கப்படுகின்றது.
எவ்வாறிருப்பினும், இப்பகுதியில் வறட்சியான காலங்களில் போதியளவு நீர் கிடைப்பதில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, பிரதேசவாசிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக இப்பகுதியில் கிணறு ஒன்றை கட்டி பிரதான குழாயுடன் இணைத்து பிரதேசவாசிகளுக்கு போதியளவு நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர், கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி கிணற்றுடன் பிரதான குழாய் இணைக்கப்பட்டு பிரதேசவாசிகளுக்கு நீர் வழங்கப்பட்டது.
பின்னர், வழங்கப்பட்ட நீர் சேரும் சகதியுமாக காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்ததையடுத்து நீரை சுத்தம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது, மின்னேரியா, ஜயந்திபுர, தம்பலவெவ பகுதிக்கு வழங்கப்படும் நீர் சுத்தமானது என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.