கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் கடந்த 03 ஆம் திகதி சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகள் பற்றிய தேசிய மக்கள் சக்தியின் தேசிய கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வெளியிடுதல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே சமூக ஆர்வலர் சுகத் வசந்த த சில்வா இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இன்றளவில் பலர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தாலும் கூருணர்வுமிக்க ஒருவராக ஜனாதிபதி பதவிக்காக நியமிக்கப்படுகின்ற ஒருவராக அநுர குமார திசாநாயக்க மாத்திரமே இருக்கிறார்.
எமது நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது தானாக இடம்பெற்ற ஒன்றல்ல. இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் பிறப்பித்த ஒன்றாகும். அதைப்போலவே இந்த நாட்டில் இருக்கின்ற பதினாறு இலட்சம் வலதுகுறைந்தவர்களில் எவருமே இந்த வங்குரோத்துநிலைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களல்ல.
எனினும் பொருளாதார சீரழிவினால் மூச்செடுக்க இயலாதநிலைக்கு ஆளாகியவர்கள் வலதுகுறைந்தவர்கள் அனைவருமேயாவர். எமது உழைப்பினை விற்க நாங்கள் தயார்.
அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். வலதுகுறைந்தவர்கள் அத்தகைய இயலாமைநிலையை வெற்றிகண்டு சமூகமயமாகத் தயார்.
இற்றைவரை சுயதொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வலதுகுறைந்தோருக்கு நிலவிய வாய்ப்புகள் அனைத்துமே அற்றுப்போய்விட்டன. குறைந்தபட்சம் ஊதுபத்தியைக்கூட தயாரித்து விற்கமுடியவில்லை.
இந்த நிலைமையை மாற்றியமைத்துக்கொள்ள இன்று வெளியிடுகின்ற தேசிய கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமென்ற தீவிர நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்றார்.