புலமைசார் குறைபாடுகள் கொண்ட பிள்ளைகள் எழுச்சியடையும் வகையில் சமூகத்தை உருவாக்க ஒன்றுசேர்வோம்

52 0
கல்வியமைச்சு இற்றைக்கு  53 வருடங்களுக்கு முன்னர் விசேட தேவைகள் நிலவுகின்ற பிள்ளைகள் தொடர்பில் கவனம் செலுத்தியபோதிலும்  மேல்மாகாணப் பாடசாலைகளில்  இந்த பிள்ளைகளுக்காக 150 கூறுகள் மாத்திரமே நிலவுகின்றன.

விசேட தேவைகள் நிலவுகின்ற பிள்ளைகளுக்கான பாடசாலை 1912 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் மேல்மாகாணத்தில் 1310 பாடசாலைகளில் விசேட தேவைகள் நிலவுகின்ற பிள்ளைகளுக்கான 150 கூறுகள் மாத்திரமே உள்ளன என விவேக வளர்ச்சி குன்றிய சமுதாயம் பற்றிய சமூக செயற்பாட்டாளர் டீ.எம். திலகரத்ன தெரிவித்தார்.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் கடந்த 03 ஆம் திகதி சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகள்  பற்றிய தேசிய மக்கள் சக்தியின் தேசிய கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வெளியிடுதல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே விவேக வளர்ச்சி குன்றிய சமுதாயம் பற்றிய சமூக செயற்பாட்டாளர் டீ.எம். திலகரத்ன  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலதுகுறைந்த ஆட்களால் தமக்குள்ள ஏதேனும் சிக்கல் பற்றி ஏதேனும் விதத்தில் முன்வைக்க இயலுமாயினும் விவேக வளர்ச்சி தொடர்பில் நிலவுகின்ற சிக்கல்களை முன்வைப்பதற்கான ஆற்றல் கிடையாது.

வழமைபோல செயலாற்றமுடியாத இயலாமைநிலை, அந்த இயலாமைநிலை காரணமாக ஏற்படுகின்ற சிக்கல்களை இயலாமைநிலை என அழைக்கலாம்.

விவேக வளர்ச்சியற்ற பிள்ளைகள் பற்றி விளங்கிக்கொண்டு அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தாமையால் இதுவரை பாரிய அநீதி ஏற்பட்டுள்ளது.

இந்த அனைத்துப் பிள்ளைகள் தொடர்பிலும் சமூகத்தில் நிலவுகின்ற உளப்பாங்கு தவறானதாகும். இவ்வாறான பிள்ளைகள் இருக்கின்ற பெற்றோர்கள் எதிர்நோக்குகின்ற பாரதூரமான சிக்கல் அத்தகைய பிள்ளைகளை சமூகத்திற்கு ஒரு சுமையாக  எஞ்வைத்துவிட்டு இறப்பதாகும்.

கல்வியமைச்சு இற்றைக்கு  53 வருடங்களுக்கு முன்னர் விசேட தேவைகள் நிலவுகின்ற பிள்ளைகள் தொடர்பில் கவனஞ்செலுத்தியபோதிலும்  மேல்மாகாணப் பாடசாலைகளில்  இந்த பிள்ளைகளுக்காக 150 கூறுகள் மாத்திரமே நிலவுகின்றன.

விசேட தேவைகள் நிலவுகின்ற பிள்ளைகளுக்கான பாடசாலை 1912 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் மேல்மாகாணத்திலன் 1310 பாடசாலைகளில் விசேட தேவைகள் நிலவுகின்ற பிள்ளைகளுக்கான 150 கூறுகள் மாத்திரமே உள்ளன.

இந்த பிள்ளைகளின் விண்ணப்பப் பத்திரங்கள் பாடசாலைகளால் நிராகரிக்கப்படுகின்றன. புலமைசார் குறைபாடுகள் நிலவுகின்ற பிள்ளைகளை இனங்காணல்கூட மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் கிடையாது.

அதனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்கீழ். புலமைசார் குறைபாடுகள் நிலவுகின்ற பிள்ளைகள் சொந்தக்காலில் நிற்கக்கூடிய சமூகமொன்றை உருவாக்கிட நாமனைவரும் ஒன்றுசேர்வோமென அழைப்புவிடுக்கிறோம் என்றார் .