பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை சபாநாயகர் பின்பற்றவேண்டும்

47 0
பொலிஸ்மா அதிபர் விவகாரம்  தொடர்பில்  உயர்நீதிமன்றத்தின் உத்தரவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன பின்பற்றவேண்டும் என  சட்டமா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் சபாநாயகர் ஆலோசனையை கோரிய நிலையிலேயே சட்டமா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபர்  விவகாரம் தொடர்பில் முழுமையான ஆலோசனை அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைகளை  சட்டமா அதிபர் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

சமீபத்திய சட்ட சிக்கல்களின்மத்தியில் சபாநாயகர் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பது குறித்து இந்த அறிக்கை வழிகாட்டுதல்களை வழங்கும்;.

இந்த விவகாரம் தொடர்பில் பிரதமநீதிபதியின் ஆலோசனைகளை பெறப்போவதில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.