தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நிறைவு

43 0

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம்  இன்று திங்கட்கிழமையுடன் (05)  நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக உரிய தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்கள் செல்லுபடியாகாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பல்வேறு தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் நிறைவடைவதோடு, எக்காரணம் கொண்டும் அது ஒத்திவைக்கப்பட மாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

www.elections.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று தபால் வாக்கு விண்ணப்பதாரர்கள் மற்றும் ஏனைய வாக்காளர்கள் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான கட்டுப்பணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.