கைதுசெய்யப்பட்ட நால்வரில் வெல்லவாய பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை ஆசிரியையும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றைய மூவரும் புத்தல, வெல்லவாய மற்றும் கல்கமுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கஜ முத்துக்களை விற்பனை செய்வதற்காக திஸ்ஸமஹாராம பிரதேசத்திற்கு வருகை தந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.