கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் தெல்பிட்டிய காரியாலயத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (31) புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புடலுஓயா பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இலங்கை போக்குவரத்து சபையின் தெல்பிட்டி காரியாலயத்தில் பணியாற்றும் ஊழியரொருவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.